×

செட்டிநாட்டு பருப்புத் துவையல்

தேவையானவை

துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு கால் கப்,
காய்ந்த மிளகாய் 2,
புளி கொட்டைப்பாக்களவு,
தேங்காய்த் துருவல் ஒரு டீஸ்பூன்,
பூண்டு 2 பல்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை

வெறும் கடாயில், பருப்பை பொன்நிறமாக வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், புளி, தேங்காய்த் துருவல். உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாகவும், கரகரப்பாகவும் அரைக்கவும். கடைசியாக, பூண்டு சேர்த்து ஒருமுறை சுற்றி எடுக்க… செட்டிநாட்டுப் பருப்புத் துவையல் ரெடி!

The post செட்டிநாட்டு பருப்புத் துவையல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்